வந்தே பாரத் ரயில் கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சிறப்புகள்

சென்னை - கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

PT WEB

பேருந்தில் அலைந்து திரிந்து ஊருக்கு செல்வதற்குள் பயணம் என்பதே அலுத்து போய்விடும். இந்த சூழல் சாதாரண நாட்களில் பரவாயில்லை. இருப்பினும் பண்டிகை காலத்தின் போதும், அவசர நிலையின் போதும் விரைந்து செல்லவே மக்கள் எண்ணுகின்றனர். அவற்றை கருத்தில் கொண்டு, தென் மாவட்ட பயணிகளுக்கு நற்செய்தியாக வந்தே பாரத் ரயில் திட்டம் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 46 ரயில்கள் நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்கு 13 மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் ரயில் 9 மணி நேரத்தில் சென்னையை அடைவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் EXECUTIVE CLASS பெட்டிகளில் பயணம் செய்ய 3,245 ரூபாயும் , CHAIR CAR பெட்டிகளில் பயணம் செய்ய 1,605 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் வாரந்தோறும் வியாழக் கிழமையன்று சென்னை எழும்பூரிலிருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. பின்னர் 40 நிமிடங்கள் கழித்து நாகர்கோவிலில் இருந்து 2.50 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு சென்றடைகிறது.

வந்தே பாரத் ரயில் சேவை பயணிகளிடையே அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதனை வாரம் ஒருமுறை மட்டுமல்லாமல் அனைத்து நாட்களும் இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.