தமிழ்நாடு

சென்னை: குடியிருப்புகோரி மு.க.ஸ்டாலினை வழிமறித்து மனு கொடுத்த நரிக்குறவர் இன மக்கள்

சென்னை: குடியிருப்புகோரி மு.க.ஸ்டாலினை வழிமறித்து மனு கொடுத்த நரிக்குறவர் இன மக்கள்

kaleelrahman

பூந்தமல்லியில் நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு அமைக்கக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.


சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள நசரத்பேட்டையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

அப்போது 21-வது வார்டு பூவிருந்தவல்லி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நெல்சன் தலைமையில் காத்திருந்த பொதுமக்கள், ஸ்டாலின் காரை மறித்து தங்கள் பகுதியில் வீட்டுமனை பட்டாவும், தங்கள் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு குடியிருப்புகளும் கட்டித்தர வேண்டும். மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என மனு அளித்தனர்.


மனுவை பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனு அளிக்காமல் நிகழ்ச்சி முடித்து திரும்பும் வழியில் ஸ்டாலினிடம் தனியாக பொதுமக்கள் அளித்த மனுவையும் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.