தமிழ்நாடு

கோயம்பேடு மேம்பாலம் அக்டோபர் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் எ.வ.வேலு

கோயம்பேடு மேம்பாலம் அக்டோபர் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் எ.வ.வேலு

kaleelrahman

சென்னை கோயம்பேடு மேம்பால இறுதிக்கட்ட பணிகள் அக்டோபர் 31க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் ஏவ.வேலு தெரிவித்தார்.

கோயம்பேடு மேம்பால பணிகளை செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக வீணாக காலம் கடத்தியது அதிமுக அரசு என்று தெரிவித்த அமைச்சர் வேலு, ஒப்பந்த காலத்தில் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி அரசுதான் என குற்றம் சாட்டினார்.

வேளச்சேரி மேம்பால 2ஆம் அடுக்கு பணிகள் முடிக்கப்பட்டு இம்மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணியை டிசம்பர் 31க்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுளளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.