செம்பாக்கம் ஏரி pt web
தமிழ்நாடு

மொத்தமாக மாறப்போகும் செம்பாக்கம் ஏரி! இதுதான் திட்டமா.. வடிவமைப்பு, வரைவு திட்டம் தயாரிப்பு

PT WEB

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் ஏரியின் மறு சீரமைப்புக்கான வடிவமைப்பு மற்றும் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் முறையாக பராமரிக்கப்படாமல், கழிவுநீர் கலந்து மோசமான நிலையில் உள்ளன. மேலும் ஏரி நீர் செல்லும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் செல்லமுடியாமல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சென்னை புறநகரில் உள்ள பல்வேறு ஏரிகளின் பராமரிப்பிற்காக 100 கோடி ரூபாயில் பொழுது போக்கு அம்சங்களை செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி தற்போது செம்பாக்கம் ஏரிக்கான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நுழைவு வாயில், சிறுவர்கள் விளையாடும் இடம், கண்காணிப்பு கோபுரம், கழிப்பறை, வியாபார பகுதி, பார்வை மாடம், நடைபாதை, இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெறும் வகையில் வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நீர்நிலை ஆர்வலரான தயானந்த் இதுதொடர்பாக கூறுகையில், “இந்த ஏரியை ஆழப்படுத்தி இதன்கரைகளை சரிபண்ண வேண்டும். நகர்ப்புற ஏரியாக மாறிவிட்டது. எந்த ஒரு பாசனமும் கிடையாது. இந்த ஏரிக்கு மூன்று ஏரிகளில் இருந்து வரத்து இருக்கிறது. அதனால், ஆழப்படுத்திவிட்டால் அதிக மழை நீரை சேமிக்க முடியும். வெள்ளத்தை தடுக்க முடியும்” என தெரிவித்தார்.