தமிழ்நாடு

சத்தியவாணி முத்து நகரை விட்டுச் செல்லாமல் வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்!

சத்தியவாணி முத்து நகரை விட்டுச் செல்லாமல் வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்!

Rasus

சென்னை தீவுத்திடல் அருகே சத்யவாணி முத்து நகரில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்த நிலையில், வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே திறந்த வெளியில் தஞ்சமடைந்துள்ளனர். சென்னைக்கு மிக அருகாமையில் குடியிருப்பை அமைத்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்மிகு சென்னை திட்டத்தின் கீழ் கடந்த 9-ஆம் தேதி சத்தியவாணி முத்து நகர் குடிசை பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் அங்கு வசித்து வந்த மக்களை பெரும்பாக்கத்தில் உள்ள அரசு குடிசை மாற்று குடியிருப்புக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த குடியிருப்பு வாசிகள், கடந்த புதன்கிழமையன்று கூவம் நதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்குவதால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் வியாசர்பாடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், சத்தியவாணி முத்துநகரை விட்டுச் செல்லாமல், அங்கேயே திறந்த வெளியில் மக்கள் தங்கி வருகின்றனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.