தமிழ்நாடு

தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியை கண்டித்து போராட்டம்

தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியை கண்டித்து போராட்டம்

kaleelrahman

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்த சுமார் 700 பேரை மாநகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்திருப்பதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் இருக்கிறது. இதில், அண்ணாநகர் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு மண்டலமும் தனியாருக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் இந்த மண்டலங்களில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக பணியை வழங்காது என திடீரென அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 12 ஆண்டுகளாக நேரடி ஊழியர்களாக பணியாற்றி வந்தவர்கள் தற்போது தனியாரிடம் வேலைக்கு செல்லச் சொல்கிறார்கள். அப்படி தனியாரிடம் வேலை பார்த்தால் வேலைக்கு உறுதியில்லை என்று கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.