போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி விற்பனை செய்தால் மருத்தக உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் போதை தரக்கூடிய மாத்திரைகளை இளைஞர்கள், சிறுவர்கள் வாங்கி பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் காவல் கூடுதல் ஆணையர்கள் செந்தில்குமார், கண்ணன் ஆகியோர் தலைமையில் மருந்துக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்றும், அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.