போக்குவரத்துக் காவலரை தாக்கிய நபர்  pt desk
தமிழ்நாடு

சென்னை: போக்குவரத்துக் காவலரை தாக்கிய நபர்... போலீசார் விசாரணை! #Video

சென்னையில் போக்குவரத்துக் காவலரை தாக்கிய நபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜெ.அன்பரசன்

சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தராஜ் (36). இவர் இன்று ஸ்பென்சர் பிளாசா அருகே பணியில் இருந்துள்ளார். அப்போது மாநகர பேருந்துக்கு வழிவிடாமல் தடுத்துள்ளார் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர். அவரை வழி விடுமாறு காவலர் சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அந்த நபர் காவலர் ஆனந்தராஜை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

போக்குவரத்துக் காவலரை தாக்கிய நபர்

இதனையடுத்து சக காவலர்கள் அந்த நபரை பிடித்து அண்ணா சாலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், அவர் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா (45) என்பது தெரியவந்தது. மேலும், சண்முகராஜா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்ததும், கடந்த நான்கு நாட்களாக அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே போலீசார் சண்முகராஜாவை பிடித்த போது, அவர் தனது ஆடையை களைந்துகொண்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலையில் படுத்து பிரச்னை செய்தார். அந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.