தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு - சென்னையில் தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

ஜா. ஜாக்சன் சிங்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் தொடுத்த வழக்கில், மயிலாப்பூரில் பக்கிங்காங் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் உள்ள 259 வீடுகளையும் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அங்குள்ள வீடுகளை இடிக்கும் பணி கடந்த 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறைனர் அங்கு மீண்டும் வந்தனர்.

அப்போது, கண்ணையா என்பவர் எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணையா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.