தமிழ்நாடு

சென்னை மேயர் பங்கேற்ற கூட்டத்தில் ஜாலியாக 'விக்ரம்' படத்தை பார்த்து ரசித்த அதிகாரிகள்?

சென்னை மேயர் பங்கேற்ற கூட்டத்தில் ஜாலியாக 'விக்ரம்' படத்தை பார்த்து ரசித்த அதிகாரிகள்?

webteam

மேயர் பங்கேற்ற கூட்டத்தில் அலட்சியமாக செல்போனில் யு-டியூப், வாட்ஸ் அப் பார்த்து கேம் விளையாடி தூங்கி வழிந்த அரசு அதிகாரிகள்

சென்னை போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11-வது மண்டலத்தில் உள்ள வார்டுகளின் வளர்ச்சி மற்றும் திட்டபணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், ,ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, மண்டல குழு தலைவர் நௌம்பூர் ராஜன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ,வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்,

இந்நிலையில், மேயர், துணை மேயர், ஆகியோர் மக்கள் பிரச்னை குறித்து பேசிக் கொண்டிருந்தனர் அப்போது ஒருசில அரசு அதிகாரிகள் தங்கள் மொபைல் போனில் வாட்ஸ்-அப், பேஸ்புக் பார்த்தும் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதற்கு ஒருபடி மேலே சென்று ஒரு அதிகாரி 'நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.

மக்கள் குறைகளை பேச கூடிய கூட்டத்தில் அரசு அதிகாரிகள் விக்ரம் படம் பார்த்தும் தூங்கியும், கேம் விளையாடிக் கொண்டிருந்ததும், சில அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்ற நிகழ்வும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.