சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முகநூல்
தமிழ்நாடு

சென்னை: புறநகர் மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி! கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

PT WEB

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, வழக்கமாக சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப் போன்று சென்னை விமான நிலையம் முதல் விம்கோ வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னை கடற்கரை-விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதன்காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் இடையே இயக்கப்படும் 44 புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக தெற்குரயில்வே தெரிவித்துள்ளது. ஆகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.