தமிழ்நாடு

மோனோ ரயில் கொள்கை அளவில் நிறுத்தம் - அமைச்சர் தங்கமணி

மோனோ ரயில் கொள்கை அளவில் நிறுத்தம் - அமைச்சர் தங்கமணி

webteam

சென்னையில் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் தங்கமணி மோனோ ரயில் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், இடப்பற்றாக்குறை காரணமாகவும் மெட்ரோ ரயில் பணிகள் நீட்டிப்பு காரணமாகவும் மோனோ ரயில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

முன்னதாக, வேளச்சேரி - வண்டலூர், பூந்தமல்லி - கிண்டி இடையே மோனோ ரயில் அமைக்கும் திட்டத்தின் நிலை என்ன என திமுக உறுப்பினர் அன்பில் மகேஷின் வினவியதற்கு, தங்கமணி இவ்வாறு பதிலளித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என கூறியிருந்த நிலையில், அத்திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.