தமிழ்நாடு

சென்னை மெட்ரோ நிலைய பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்வு

சென்னை மெட்ரோ நிலைய பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்வு

Rasus

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, அசோக் நகர், கிண்டி, மண்ணடி, நங்கநல்லூர் சாலை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் தற்போது பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் இரு‌க்கர வாகனங்களை நிறுத்த மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 250 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்கெனவே பார்க்கிங் கட்டணம் கூடுதலாகவே இருந்தது. இந்நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும், கார்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் பகுதி வேகமாக நிரம்பிவிடுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், தேவை அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.