கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தென்காசி, தேனி மற்றும் வட தமிழகத்தில், ஞாயிறு முதல் புதன்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடே மழைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 10 ஆம் தேதி வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.