Medical Waste pt desk
தமிழ்நாடு

இது நியாயமா! குன்றத்தூரில் கல்குவாரி தண்ணீரில் மிதக்கும் மருத்துவக் கழிவுகள் - சமூக ஆர்வலர்கள் கவலை

குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரத்தில உள்ள கல்குவாரி தண்ணீரில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை அருகே குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரத்தில் 25 கல்குவாரி குட்டைகள உள்ளன. இவை ஒவ்வொன்றும் 300 முதல் 400 அடி ஆழம் கொண்டது. கைவிடப்பட்ட இந்த கல்குவாரி குட்டையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.

கடந்த 2016-17ம் ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் வறட்சியை சந்தித்தது. சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய சிக்கராயபுரம் கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, சென்னைக்குயின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

Medical Waste

அதன்பிறகு, இந்த 25 கல்குவாரி குட்டைகளையும் ஒருங்கிணைத்து, நீர்தேக்கமாக மாற்ற அரசு சார்பில் திட்டமிட்டும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.. இந்த நிலையில், சமூக விரோதிகள் கல்குவாரி சுற்றுப்பகுதியில் நெகிழி கழிவுகள் உணவுப் பொருள் கழிவுகள் மட்டுமின்றி மருத்துவக் கழிவையும் கொட்டியுள்ளனர்..வறட்சி காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த காத்திருக்கும் கல்குவாரி தண்ணீரில் மருத்துவக் கழிவுகள் மிதந்து இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு குப்பைக் கொட்டுவதை தடுத்து கல்குவாரியை கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்