தமிழ்நாடு

சென்னை: ஜூஸ் தராததால் தகராறு; கடை உரிமையாளரின் காது அறுப்பு!

சென்னை: ஜூஸ் தராததால் தகராறு; கடை உரிமையாளரின் காது அறுப்பு!

kaleelrahman

புழுதிவாக்கம் ஜூஸ் கடையில் புகுந்து சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதில் கடை உரிமையாளரின் காது அறுக்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு வேளச்சேரி நேதாஜி காலனியை சேர்ந்தவர் ராஜன் (48). இவர் புழுதிவாக்கம் பாலாஜி நகர் பிரதான சாலையில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையின் எதிர்புறத்தில் உள்ள ஏடிஎம்மின் துப்புரவு பணியாளர் மற்றும் ஆட்டோவில் குடிபோதையில் வந்த 2 பேர், ஜூஸ் கேட்டு தகராறு செய்துள்ளனர்.


ராஜன் ஜூஸ் தரமறுத்ததால், கடையின் முன்பு இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து ராஜனின் தலையில் தாக்கிவிட்டு கடையில் வைத்திருந்த பழங்களை தூக்கி எரிந்து நாசம் செய்து விட்டும் மிரட்டி விட்டும் சென்றுள்ளனர். இதில் ராஜனின் காது அறுபட்டது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து ராஜனை குரோம்பேட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட வேளச்சேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராம்குமார் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.