சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரயில் நிலையங்கள் உட்பட, பல்வேறு இடங்களில் வெடி குண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் - 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு அதிரடி படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று, சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம், சிவகங்கை ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ரயில்வே தண்டவாளம், பாலங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பொதுமக்களின் உடைமைகள் போன்றவற்றையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.