8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்களை வெட்டக்கூடது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சேலம் 8 வழி பசுமைவழி சாலை திட்டம் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியே அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என எச்சரித்தனர். மரங்களை வெட்டாக்கூடாது என்ற உத்தரவை மீறும் வகையில் பட்டா நிலங்களை, சாலைக்குள் வரும் அரசு நிலங்களாக மாற்றினால் 8 வழி சாலை திட்டம் முழுமைக்கும் தடை விதிக்க நேரிடும் என்றனர்.
அத்துடன் மரங்கள் வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது. சமூக பாதிப்பு எந்த அளவில் உள்ளது ? என கேள்விகள் எழுப்பினர். 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்பட்ட புகாருக்கு, மரங்களை வெட்டுவதா? எனக் கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அரசு சார்பில் அறிக்கை தக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.