தமிழ்நாடு

ஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம்

ஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம்

webteam

ஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பல இடங்களில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆன்லையில் பட்டாசு விற்பனைக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என ஷேக் தாவூத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அத்துடன் ஆன்லையில் அதிக அளவு சீனப் பட்டாசுகள் விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைனில் பட்டாசுகள் விற்க தற்காலிக தடை விதித்தது. இதுதொடர்பாக வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் ஆன்லைனில் பட்டாசு விற்பது தொடர்பான வழக்கை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.