தமிழ்நாடு

தீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை

தீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை

Rasus

தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

மிக அவசரமான மருத்துவ தேவை என்றதும் பெரும்பாலான மக்களுக்கு நினைவில் வரக்கூடிய எண் 108. தமிழகத்தில் 950-க்கும் மேற்பட்ட இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. 108 ஆம்புலன்ஸ்களில் அவசர கால மருத்துவ நிபுணர், ஓட்டுநர், கால் சென்டர் தொழிலாளர்கள் என 4500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவ சேவைக்காக வாரத்தின் ஏழு நாட்களிலும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

2008-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் விபத்து பிரிவு, குழந்தைகள் பிரிவு, பிரசவம் என தனித்தனியாக ஆம்புலன்ஸ்கள் இருக்கின்றன. இதனிடையே 30 சதவிகித போனஸ் கோரி வரும் 5-ஆம் தேதி இரவு முதல் 6-ஆம் தேதி இரவு வரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போர‌ட்டம் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட இடைக்கால தடை விதித்துள்ள உயர்நீதிமன்றம், '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின்கீழ் ஆம்புலன்ஸ் சேவை வருவதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட கூடாது என உயர்நீதிமன்ற‌ம் அறிவுறுத்தியுள்ளது.