தமிழ்நாடு

“கோயில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயட்டும்” - சென்னை உயர் நீதிமன்றம்

“கோயில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயட்டும்” - சென்னை உயர் நீதிமன்றம்

Sinekadhara

கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில் அறங்காவலர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்மீது சட்டரீதியான நடவடிக்கையை தொடரலாம் என்றும் அறநிலையத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து, கோயில் நிலம், சொத்து, நகையை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்றும், அந்த பிரிவை பொதுமக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி மற்றும் மொபைல் எண்ணை அறிவிக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க விளம்பரம் வெளியிடுக என்றும் தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.