தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்ட பைக் ரேஸை தடுக்க உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்ட பைக் ரேஸை தடுக்க உத்தரவு

webteam

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ்களை தடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புத்தாண்டை வரவேற்கும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். சென்னை போன்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க  நடவடிக்கை எடுக்க ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் புத்தாண்டன்று இரவில் ஏராளமான வாகன விபத்துகள் நடப்பதாகவும் அப்போது நடைபெறும் பைக் ரேஸ்களை இதற்கு காரணம் என்றும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புத்தாண்டு இரவில் ஜாலி ரைடு என்ற பெயரில் பைக் ரேஸ்கள் நடைபெறுவதை தடுக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றிறிக்கை அனுப்புமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர். மேலும் நட்சத்திர விடுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 179 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.