தமிழ்நாடு

கொரோனா கொடுத்த ஓய்வு.. இயற்கை விவசாயத்தில் சாதித்த வழக்கறிஞர்...! - குவியும் பாராட்டு

கொரோனா கொடுத்த ஓய்வு.. இயற்கை விவசாயத்தில் சாதித்த வழக்கறிஞர்...! - குவியும் பாராட்டு

webteam

கொரோனா ஊரடங்கை பயனுள்ள வகையில் சோளம் சாகுபடி செய்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஒருவர் சாதித்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிடாரங்கொண்டான் சங்கிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் சங்கிருப்பு என்றாலும் பெரும்பாலும் தனது பணி சார்ந்து சென்னையிலேயே வசித்து வருகிறார். தற்போது கொரானா ஊரடங்கு காரணமாக நீதிமன்ற பணிகள், வழக்குகள் இல்லாததால் ஊர் திரும்பிய தினேஷ்குமார் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் குறுகிய காலத்தில் மாற்று விவசாயம் செய்ய முடிவெடுத்தார்.

ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றவும் முடிவு செய்து 75 நாட்கள் பயிரான சோளம் சாகுபடி செய்ய தீர்மானித்துள்ளார். அதன்படி தனது வயலில் பயிரிட்டு இயற்கை உரங்கள் கொண்டு மோட்டார் பாசனம் மூலம் சோளம் சாகுபடி செய்துள்ளார். தற்போது சோளம் நன்றாக வளர்ந்து கதிர் வைத்து அறுவடைக்கு தயாராகிவிட்டது.

அவை தரமான கதிர்களாக உள்ளதால் தற்போதே வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதாகவும் இன்னும் 5 தினங்களில் அறுவடை செய்யபடும் என்றும் வழக்கறிஞர் தினேஷ் தெரிவிக்கிறார். கொரானா ஊரடங்கு தனக்கு பயனுள்ளதாகவும், இலாபகரமாகவும் அமைந்துள்ளதாகவும் என்ன தொழில் செய்தாலும் விவசாயத்தை கைவிடாமல் மாற்று சாகுபடிகளை செய்து விவசாயிகள் சாதிக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.