தமிழ்நாடு

மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Rasus

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, அய்யாக்கண்ணு மெரினாவில் ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு எடுத்த நடவடிக்கை சரியே என தெரிவித்த உயர்நீதிமன்றம், மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.