பள்ளி மாணவர்கள் அவதி pt desk
தமிழ்நாடு

சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை - பள்ளி மாணவர்கள் அவதி!

சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியிருப்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ள மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி மதுரவாயில் குன்றத்தூர் மாங்காடு திருவேற்காடு செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் இன்று காலை பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

விட்டு விட்டு பெய்து வரும் கனமழை

பூந்தமல்லியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் நனைந்தபடி சென்றனர். பள்ளிக்கூட வாசலில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து நிற்பதால் மாணவர்கள் அதில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இதே போல் மழைநீர் தேங்கி இருப்பதால் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.