தமிழ்நாடு

நடிகர்கள் மீதான வழக்கு விசாரணை‌க்கு உய‌ர் நீதிமன்றம் தடை

நடிகர்கள் மீதான வழக்கு விசாரணை‌க்கு உய‌ர் நீதிமன்றம் தடை

webteam

நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மீதான அவதூறு‌ வழக்கை நீலகிரி நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ல் செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், விஜயகுமார், இயக்குனர் சேரன், அருண் விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் மீது நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரொசாரியோ மரியசூசை என்பவர் நீலகிரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 8 பேருக்கும் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மே 26-ல் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று 8 பேரும் தொடர்ந்த வழக்கி நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நடிகர்கள் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.