தமிழ்நாடு

பாலிடெக்னிக் பணியிட அரசாணை ரத்து

பாலிடெக்னிக் பணியிட அரசாணை ரத்து

Rasus

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பி.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதை எதிர்த்து செல்லமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில், பொறியியல் படிப்பை அனைத்து வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். இதனைத்தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்காக கடந்த ஜூனில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய அறிவிப்பாணையை 2 வாரங்களுக்குள் வெளியிடும் படியும் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.