சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஹெலிக்காப்டர்கள், அலைமோதிய மக்கள் கூட்டம் pt web
தமிழ்நாடு

10 லட்சம்பேர் கண்டுகளிப்பு... லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது சென்னை விமான சாகச நிகழ்ச்சி!

PT WEB

இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி நடைபெறும் விமான சாகச நிகழ்வுக்காக சிறப்பு ஏற்பாடுகள் இன்று செய்யப்பட்டிருந்தன. இதற்காக மக்கள் கூட்டம் மெரினாவில் அதிகளவில் இன்று குவிந்தது. தொடந்து மக்கள் கூட்டம் கடற்கரையை நோக்கி வந்துகொண்டே இருந்தன. விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம் பேர் கண்டுகளிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் விமான சாகசங்களை கண்டு களித்தனர்.

ஹெலிகாப்டர்கள் தொடங்கி, மிக், மிராஜ், தேஜஸ், ரஃபெல், சுகாய் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன. 20 வகையான அணிகளை சேர்ந்த விமானிகள் வானை வர்ணஜாலமாக்கினர்.

வானில் Heart வரைந்த ஹெலிகாப்டர்கள்

சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானக் குழுக்களுக்கு சேரா, சோழா, பல்லவா, காவிரி, காஞ்சி, தனுஷ், மெரினா என தமிழில் பெயர் வைக்கப்பட்டது. வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்றன.

சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு, வானில் வட்டமடித்து சுழன்று வந்து மூவர்ண கொடியை வரைந்து மக்களை வியப்பில் ஆழ்த்தியது. மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகள் கொண்ட ஜாகுவார் விமானங்கள் விண்ணில் வலம் வந்து சாகசத்தில் ஈடுபட்டன. சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான, தேஜஸ் விமானங்களும் சீறிப்பாய்ந்து மெரினா கடற்கரையை அதிர வைத்து ஆச்சரியப்படுத்தின. பல்வேறு ஆச்சர்ய சாகசங்களை தொடர்ந்து, 1 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.

#BREAKING | லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சென்னை சாகசம்

இந்த விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம் பேர் கண்டுகளித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் விமான சாகசங்களை கண்டு களித்தனர். இவையன்றி பட்டினம்பாக்கம் போன்ற கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன்மூலம் உலகிலேயே அதிக மக்கள் கண்டுகளித்த போர் விமான சாகச நிகழ்ச்சியாக சென்னை விமான சாகச நிகழ்ச்சி மாறியுள்ளது.

#JUSTIN | விமான சாகசம் - சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு

மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம்பேர் வரை இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி.