கால்வாயில் கொட்டப்பட்டுள்ள ஆவின் பால் பாக்கெட்டுகள் pt desk
தமிழ்நாடு

சென்னை: கால்வாயில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான ஆவின் பால் பாக்கெட்டுகள்

திருநீர்மலை நாட்டுக் கால்வாயில் காலாவதியான ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை நாட்டுக் கால்வாயில், திருநீர்மலை, வீரராகவன் ஏரியின் உபரி நீர் சென்று அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதனிடையே, இந்த நாட்டுக் கால்வாயில் கழிவுநீர், இறைச்சிக் கழிவுகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஆவின் பால் பாக்கெட்டுகள்

இந்நிலையில், காலாவதியான ஆவின் பால் பாக்கெட்டுகள் நாட்டுக் கால்வாயில் கொட்டப்பட்டுள்ளது. ஆவின் பால் பாக்கெட்டுகளை கொட்டிச் சென்றது யார், கால்வாயில் வீசிச் சென்ற காரணம் என்ன என்பது குறித்து தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் விசாரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆவின் பால் கடைகளில் விற்பனை செய்யப்பட்டது போக மீதமிருந்து, காலாவதியாகும் பட்சத்தில் அதனை ஆவின் நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். இது போன்று பொதுவெளியில் கொட்டுவது முறையானது அல்ல என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தரிடம் கேட்டபோது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.