தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரக்கிளை  pt desk
தமிழ்நாடு

சென்னை: தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரக்கிளை... தாமதமாக புறப்பட்டுச் சென்ற மின்சார ரயில்

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரத்தின் கிளை சரிந்து தண்டவாளத்தில் விழுந்ததால் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பலகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அதிலொன்றாக மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரக்கிளை

இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இன்று வழக்கம்போல மின்சார ரயிலொன்று சென்று கொண்டிருந்தது. வழியில் திடீரென குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரக்கிளையொன்று சரிந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதையடுத்து உடனே ரயில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற குரோம்பேட்டை போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் மின்சார ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர் என்றபோதிலும், நல்வாய்ப்பாக அனைவரும் செல்ல வேண்டிய இடத்துக்கு பாதுகாப்பாக சென்றடைந்தனர்.