சென்னை அமைந்தகரையில் நெல்சன் சேம்பர்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதியில் பல அடி ஆழத்திற்கு உள் வாங்கிய விவகாரம் தொடர்பாக பொதுப்பணித் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், பொதுப்பணித் துறை இன்ஜினியர் (Structural eng.,) பாலமுருகன், சீனியர் இன்ஜினியர் (Senior Eng.,) மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்தில் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்தும் குடியிருப்பு பகுதிகள் சரிந்ததற்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்து சாம்பிள்ஸ் படிவுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆய்வு அறிக்கைகள் முடிவில் தான் அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதி உள்வாங்கியதற்கான காரணம் குறித்தும் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள் விரிசல் அடைந்ததற்கான காரணம் குறித்தும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தரைப்பகுதி உள்வாங்கிய இடத்தில் அம்பா மால் -ன் Taj Sky View Hotels நிர்வாகத்தினர் உள்வாங்கிய தரைப்பகுதியை அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் சிமெண்ட் கொண்டு தடுப்புச் சுவர் எழுப்பி வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.