சென்னை | பேருந்து, ரயில், மெட்ரோ முகநூல்
தமிழ்நாடு

சென்னை | ஒரே டிக்கெட்.. ஆனா மூன்று வகை போக்குவரத்து பயணம்... வரப்போக்கும் சூப்பர் திட்டம்!

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் மூன்று வகை போக்குவரத்தில் பயணம் செய்யும் திட்டத்திற்கான செயலியை உருவாக்க தனியார் நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கி உள்ளது.

PT WEB

சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 போக்குவரத்து வசதிகள் இருக்கக் கூடிய நிலையில் இந்த மூன்றிற்கும் மக்கள் தனித் தனியாக டிக்கெட் எடுத்து பயணித்து வருகின்றனர்.

metro railway station

இவை அனைத்திற்கும் ஒரே பயணச் சீட்டை பயன்படுத்தும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டத்திற்கான செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited என்ற நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தி மூன்றிலும் பயணிக்க வசதியாக கார்டு போன்ற பாஸ் அறிமுகப்படுத்த பட உள்ளது. இந்த கார்டை பொதுமக்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கியூ ஆர் கோடை பயன்படுத்தி அனைத்துத் பொது போக்குவரத்திலும் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை | பேருந்து, ரயில், மெட்ரோ

முதற்கட்டமாக இந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.