சென்னை மாநகராட்சி விளக்கம் முகநூல்
தமிழ்நாடு

உதட்டுச் சாயம் பூசியதற்காக தபேதார் பணியிட மாற்றமா? சென்னை மாநகராட்சி தரும் விளக்கம் என்ன?

உயர் அதிகாரிகளின் உத்தரவை மீறியதே பெண் தபேதார் பணியிட மாற்றத்துக்கு காரணம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

PT WEB

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தபேதராக பணியாற்றி வந்த மாதவி என்பவர், உதட்டுச் சாயம் பூசியபடி பணிக்கு வந்ததாகவும், உதட்டுச் சாயத்தின் அளவை குறைத்துக் கொள்ளும்படி அவரை அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே, அவர் மணலி மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு பணிக்கு வந்ததால் தபேதார் மாதவி, பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நேரம் தவறி பணிக்கு வந்ததாலும், அதுகுறித்து மெமோ அனுப்பியும் உரிய பதில் அளிக்காததாலும் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடமை தவறியதும், உயர் அதிகாரிகளின் உத்தரவை மீறியதும்தான் மாதவியின் பணியிட மாற்றத்துக்கு காரணம் எனவும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.