தமிழ்நாடு

சென்னை: கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு

சென்னை: கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு

kaleelrahman

கொரோனா ஊரடங்கில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு திருமண மண்டபத்தில் விழா எடுத்து பொதுமக்கள் நன்றி செலுத்தினர்.


கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி வீடுகளிலேயே இருந்தாலும், கொரோனா மேலும் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை, மின்வாரியம், துப்புரவு பணியாளர்கள் என அரசு ஊழியர்கள் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களை பாராட்டும் விதமாக போரூரை சேர்ந்த பொதுமக்கள், அந்த பகுதியைச் சேர்ந்த மின்வாரியம், தீயணைப்பு, மருத்துவம், போலீஸ், துப்புரவு பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து திருமண மண்டபத்தில் வைத்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்.


மேலும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி கவுரவித்தார்கள். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கண் பார்வை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் பண உதவியும் செய்தனர். கொரோனா காலத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்த அரசு ஊழியர்களுக்கு போரூர் பொதுமக்கள் நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பாராட்டு விழா நடத்தியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விழாவில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் டீன் வசந்தாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.