புதிய தலைமுறை வீடியோ புதிய தலைமுறை
தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: புதிய தலைமுறை வீடியோவை ஆதாரமாக காட்டிய சென்னை ஆணையர்!

ஆளுநர் மாளிகையில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு விவகாரம் தொடர்பாக சென்னை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது புதிய தலைமுறை அன்று பதிவிட்டு இருந்த வீடியோவை ஆதாரமாக சுட்டி காட்டி விளக்கினார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் மீது நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை காவல்துறையினர் கைது செய்ததில் அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.

டிஜிபி சங்கர் ஜிவால்

இதுதொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “ஆளுநர் மாளிகை முன் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது.

‘ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். பெட்ரோல் குண்டு வீசியவர் ஆளுநர் மாளிகை வாயிற் காப்பாளர்களால் தடுக்கப்பட்டது. அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது’ என ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டிருக்கிறது. அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. போலவே மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின் வாகனம் சென்றபின் கறுப்பு கொடி வீசிய புகாரில் 73 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி பதிவுகள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சென்னை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை ஆணையர் திரு சந்தீப் ராய் ரத்தோர்

அவர் இதுதொடர்பாக புதிய தலைமுறை அன்று பதிவிட்டு இருந்த வீடியோவை ஆதாரமாக சுட்டி காட்டி விளக்கினார்.

அவர் பேசுகையில், “பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் தேனாம்பேட்டை வழியாக கிண்டி வரை நடந்துவரும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இவர் தனியாகதான் நடந்து வருகிறார். இவருடன் யாரும் நடந்து வரவில்லை. ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது” என்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அவர் கூறிய விளக்கத்தை, விரிவாக இங்கே காணலாம்: