தமிழ்நாடு

"மௌனமாக இருக்கவேண்டாம்" - ஜெயம்ரவி நடித்துள்ள போதைப்பொருள் விழிப்புணர்வு வீடியோ

"மௌனமாக இருக்கவேண்டாம்" - ஜெயம்ரவி நடித்துள்ள போதைப்பொருள் விழிப்புணர்வு வீடியோ

Sinekadhara

சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நடிகர் ஜெயம் ரவி, பயமே மௌனமாக்கலாம் என்கிறார். அதனைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் பணம் கொடுத்து போதைப்பொருளை வாங்குவதை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பார்க்கிறார். ஆனால் போதைப்பொருளை விநியோகித்த நபர் மிரட்டும் பார்வையில் பார்த்தவுடனே அங்கிருந்து காரில் ஏறி சென்றுவிடுகிறார். அவர் வீட்டிற்கு வந்தவுடனே தனது இளம்வயது மகன் அதே போதைப்பொருளை பயன்படுத்துவதைப் பார்த்து கதறி அழுகிறார்.

அப்போது ஜெயம் ரவி மீண்டும் அங்கு தோன்றி, தெருவில் நடக்கும்போது அமைதியாக சென்றுவிடுகிறோம், அதுவே நம் வீட்டிற்கும் வரும்வரை காத்திருக்க போகிறோமா? என்று கேள்வி எழுப்புகிறார். மீண்டும் கஞ்சாவை இருவர் புகைப்பதை பார்க்கும் இருவரும் பேசும் ஒரு கலந்துரையாடல் வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள மகேஷ் அகர்வால், Drive against Drugs(DAD) என்ற வாக்கியத்துடன், மௌனமாக இருக்கவேண்டாம் என்று குறிப்பிட்டு, போதைப்பொருள் குறித்து புகாரளிக்க 10581 என்ற எண் மற்றும் 9498410581 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் பகிர்ந்துள்ளார்.