தமிழ்நாடு

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று ! மருத்துவமனையில் அனுமதி

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று ! மருத்துவமனையில் அனுமதி

jagadeesh

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா வைரஸ் காரணமாக முன்களப் பணியாளர்களும் அதிகாரிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையினர், மருத்துவப் பணியாளர்கள் என பலருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் நேற்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.