தமிழ்நாடு

மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

webteam


 தொடர் மழையால் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் மாதத்தில் தொடர்மழை பெய்தது. மழையின் காரணமாக சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒ‌ப்பிடும்போது சென்னை மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 2 மீட்டர் வரை உயர்ந்திருக்கிறது. அதாவது 0.55 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை அதிகரித்துள்ளது.

திருவொற்றியூரில் கடந்த ஆண்டு 3.81 மீட்டருக்கு கீழ் சென்ற நீர்மட்டம் தற்போது 2.54 மீட்டராக அதிகரித்துள்ளது. அதேபோல், கோடம்பாக்கத்தில் 4.46 மீட்டருக்கு கீழ் இறங்கியிருந்த நீர்மட்டம் 3.06 மீட்டராகவும், அடையாறில் மூன்றரை மீட்டருக்கும் கீழ் இறங்கியிருந்த நீர்மட்டம் தற்போது 2.55 மீட்டராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மாநகர் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் 0.55 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை அதிகரித்திருப்பது எதிர்வரும் கோடைக்காலத்தைச் சமாளிக்க பயனுள்ளதாக இருக்கும் என குடிநீர் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.