தமிழ்நாடு

சென்னையில் கட்டுமானப்பணி விபத்து : 2 பேர் பலி

சென்னையில் கட்டுமானப்பணி விபத்து : 2 பேர் பலி

webteam

சென்னை சேத்துப்பட்டில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 

சென்னை சேத்துப்பட்டு ஸ்பர் டேங்க் சாலை, உணவகம் ஒன்றின் புதிய கட்டடத்தின் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக கட்டுமான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது கட்டடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய 2 பேர் பலத்தக் காயம் ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதுமட்டுமின்றி 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, கீழ்பாக்கம் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.