தமிழ்நாடு

செயின் திருடனை மடக்கிப் பிடித்த இளைஞருக்கு டிவிஎஸ் கம்பெனியில் வேலை

செயின் திருடனை மடக்கிப் பிடித்த இளைஞருக்கு டிவிஎஸ் கம்பெனியில் வேலை

webteam

சென்னையில் மருத்துவரின் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை துணிச்சலுடன் விரட்டிப் பிடித்த இளைஞருக்கு, காவல் ஆணையர் விஸ்வநாதன் வேலை வாங்கிக்கொடுத்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் அமுதாவின் சங்கிலியை ஒருவர் பறித்துச் சென்றார். அவரை திருமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் சூர்யா தனியாளாக விரட்டிப் பிடித்தார். இதனையடுத்து ஏப்ரல் 19-ம் தேதி சூர்யாவை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவருக்கு வெகுமதி ‌‌‌வழங்கினார்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் முன்னிலையில் இளைஞர் சூர்யாவுக்கு எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து, ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இதேபோல் ரோட்டரி சங்கம் சார்பிலும் சூர்யாவுக்கு 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உதவியால் இளைஞர் சூர்யாவுக்கு வேலை கிடைத்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனம் சூர்யாவுக்கு ஏசி மெக்கானிக் பணி வழங்கி உள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சூர்யாவிடம் வழங்கினார்.

சூர்யா யார்? என்று தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள் https://goo.gl/ZkWXcr