தமிழ்நாடு

“இனி தவறு செய்ய மாட்டோம்” - போலீஸ் முன் உறுதியெடுத்த “ரூட்டு தலைகள்”

webteam

சென்னையில் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட ‘ரூட் தல’ எனப்படும் மாணவர்கள் இனி தவறு செய்யமாட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.

சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாகத்தியுடன் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சென்னையில் மட்டும் 90 ‘ரூட் தலை’கள் இருப்பதாக தெரியவந்தது. மாணவர்களின் அடாவடி செயல்களை நிறுத்த காவல்துறை சார்பில் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூட் தல எனப்படும் மாணவர்கள் பலரை காவல்துறையினர் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணைக்குப் பின்னர் அந்த மாணவர்கள் காவல்துறையினரின் முன்பு உறுதிமொழி ஏற்றனர். அதில், “எந்த விரும்பதகாத செயல்களும் செய்யமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம், தவறினால் சட்டப்படி நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என உறுதியளிக்கிறோம்” என்று ஒரே குரலில் கூறி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த வீடியோ காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.