தமிழ்நாடு

சாலையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள்: பெருகும் கொசுக்கள்

webteam

சென்னை அசோக்நகர் சாலையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களால் குப்பைகள் அகற்றப்படாமல், கொசுக்கள் பெருகுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை அசோக் நகர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்கள் நிற்பதாக கூறும் மக்கள், அதன்மூலம் ஏற்படும் குப்பை கழிவுகளில் இருந்து கொசுக்கள், தொற்று நோய்கள் பரவுவதாக கூறுகின்றனர். சாலையோரத்திலேயே வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ, தள்ளு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்து வருவதால், அங்கு சேரும் குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகளால் அகற்ற முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிகை எடுக்க வேண்டும் என அசோக்நகர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொசுக்களால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலையில், அந்த வாகனங்களால் கொசுக்கள் அதிகரிப்பது மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.