தமிழ்நாடு

சென்னை: 19 கிலோமீட்டர் தூரத்தை 6.14 மணி நேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி

சென்னை: 19 கிலோமீட்டர் தூரத்தை 6.14 மணி நேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி

kaleelrahman

கடலில் நீச்சல் அடித்து 19 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி உலக சாதனை படைத்தார்.

சென்னை பழைய மகாபலிபுர சாலை, காரப்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் தருண்ஶ்ரீ தம்பதியினரின் 8 வயது மகள் தாரகை ஆராதனா. இவர், கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கோவளம் கரிகாட்டுக் குப்பம் முதல் நீலாங்ரை வரை உள்ள 19 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த தூரத்தை 6 மணிநேரம், 14 நிமிடங்களில் நீந்தி வந்த சாதனையை அசிஸ்ட் வோல்டு ரெக்கார்டு என்ற உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. சான்றிதழை விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார். 2ஆம் வகுப்பில் படிக்கும் இந்த சிறுமி, கடந்த 3 வருடங்களாக கடும் பயிற்சி எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடலிலும், கடற்கரையிலும் அதிகப்படியாக இருந்த 600 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வைத்துள்ள இவர், அதை விற்று கிடைக்கும் பணத்தை முதல்வர் ஸ்டாலின் தாத்தாவிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வழங்க உள்ளதாக தெரிவித்தார்.