தமிழ்நாடு

‘பார்ப்பதற்குதான் உணவு பொட்டலம்.. உள்ளே போதைப்பொருட்கள்’ சிக்கிய ரூ.1.65 கோடி சரக்கு

‘பார்ப்பதற்குதான் உணவு பொட்டலம்.. உள்ளே போதைப்பொருட்கள்’ சிக்கிய ரூ.1.65 கோடி சரக்கு

webteam

உணவுப்பொருட்கள் போன்று பாக்கெட்டுகளில் சீல் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டு போதை பவுடர் மற்றும் மாத்திரைகளை சென்னை சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களில் சட்டவிரோதமாக கடத்திக்கொண்டு வரப்படும் பொருட்களை சுங்கத்துறையினர் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் விநோதமாக எதாவது பிடிபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலிருந்து அனுப்பப்பட்ட பார்சல்களில், உணவுப்பொருட்கள் போன்று போதை பொருட்கள் சீல் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டன.

அவ்வாறு கொண்டுவரப்பட்ட 5210 எக்ஸ்டஸி மாத்திரைகள், 100 ஜிஎம்எஸ் எம்டீஎம்ஏ (MDMA) படிமம் மற்றும் மெத் பவுடர் எனப்படும் போதை பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை போதை மருந்து தடுப்பு சட்டப்படி கைப்பற்றியது. இவற்றின் மதிப்பு ரூ.1.65 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.