தமிழ்நாடு

சென்னை: தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் உயிரிழப்பு

சென்னை: தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் உயிரிழப்பு

kaleelrahman

ஆவடி அருகே மாத்திரை போட தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை ஆவடியை அடுத்துள்ள அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சுமதி. இவர்களுடன் தாயார் மேனகா (60) வசித்து வந்தார். இந்நிலையில் தாயாருக்கு கண் பார்வை திறன் குறைபாடு மற்றும் சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சாப்பிட்டு விட்டு சர்க்கரை நோய்க்கான மாத்திரை போட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். இதையடுத்து மேனகாவுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு உதவிக்காக அலறி துடித்துள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் மேனகா சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பார்வைத் திறன் குறைவால் தண்ணீர் என ஆசிடை குடித்ததால் பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.