எரிக்கப்பட்ட லோடு வாகனம் pt desk
தமிழ்நாடு

சென்னை | யார் வழிவிட்டுச் செல்வது என்பதில் ஏற்பட்ட பிரச்னை - பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட லோடு வாகனம்

சென்னை வானகரம் சாலையில் யார் வழிவிட்டுச் செல்வது என்ற பிரச்னையில் காரில் வந்தவர்களுக்கும் லோடு வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் லோடு வாகனம் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை மதுரவாயல் - தாம்பரம் புறவழிச் சாலையில் சர்வீஸ் சாலை உள்ளது. இதில் வானகரம் சுங்கச் சாவடியில் இருந்து மதுரவாயல் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் லோடு வாகனம் வந்துள்ளது. அப்போது காரை அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த நிலையில், லோடு வாகனத்தை மதுசூதனன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

Police station

இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அருகே உள்ள அவரது நண்பர்கள் மற்றும் அவர்களிடம் வேலை செய்பவர்களை வரவழைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து காரில் வந்த ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த அஜித் ஆகியோர் இணைந்து லோடு வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எறிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர். மது போதையில் இருந்த கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து லோடு வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.