damaged house pt desk
தமிழ்நாடு

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது ராட்சத டிரில்லிங் மெஷின் மோதி வீடு சேதம்

சென்னை போரூரில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது ஓட்டுநரின் கவனக்குறைவால் ராட்சத டிரில்லிங் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

webteam

சென்னை போரூரில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் ராட்சத டிரில்லிங் இயந்திரத்தை இயக்கியுள்ளார். அப்போது டிரில்லிங் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பார்த்தியநாதன் என்பவரது வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமடைந்த நிலையில், மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

metro rail

இதையடுத்து குடியிருப்பு வாசிகள், மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சேதமடைந்த வீட்டை சீர் செய்து கொடுப்பதாகவும், காலையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம் என குடியிருப்பு வாசிகளை, மெட்ரோ ரயில் கட்டுமான ஊழியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.