கொத்தடிமைகளாக இருந்த 5 பேர் மீட்பு pt desk
தமிழ்நாடு

சென்னை: இரு குழந்தை தொழிலாளர்கள் உட்பட கொத்தடிமைகளாக இருந்த 5 பேர் மீட்பு

சென்னையில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட ஐந்து கொத்தடிமைகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகரில் வசிப்பவர் ரஷிதா (49). இவரது வீட்டில் சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும், அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஏஓ தங்கபாண்டியன் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரஷிதா வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி, ரேஷ்மா (20), சந்தியா (20), சபாபதி ராதா (34) ஆகிய ஐந்து பேரை மீட்டுள்ளனர்.

Police station

இதையடுத்து அவர்களை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டின் உரிமையாளர் ரஷிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ரேஷ்மா என்ற பெண் ஆறு வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்ததாகவும், 17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய மூன்று லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள வளசரவாக்கம் போலீசார், ரஷிதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.