Cows pt desk
தமிழ்நாடு

சென்னை: சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் 5 பணியாளர்கள் நியமனம்?

சென்னை மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 5 பணியாளர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அவ்வபோது சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பொதுமக்களை முட்டும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாட்டுத் தொழுவங்களில் அடைக்க 5, 6, 8, 9 மற்றும் 10 ஆகிய மண்டலங்களில் தலா 5 மாடு பிடிக்கும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

cow

இந்நிலையில் கூடுதலாக மண்டலம் 1, 2, 3, 4, 7, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய 10 மண்டலங்களில் மாடு பிடிக்கும் பணியில் ஈடுபடுத்த தலா 5 மாடு பிடிக்கும் பணியாளர்களை தற்காலிக தினக் கூலி பணியாளர்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணியில் ஈடுபடுத்த சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் அரசாணை எண் 36 படி அட்டெண்டர் என்ற பணியில் நிர்ணயித்த குறைந்தபட்ச ஒரு நாள் ஊதியத்தை நபர் ஒருவருக்கு 687 ரூபாய் என நிர்ணயம் செய்யவும், இதன் மூலம் பணியாளர் ஒருவருக்கு மாதம் ரூபாய் 20,610 ஊதியமாக வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.