தமிழ்நாடு

புதுப்பொலிவுடன் கேசினோ தியேட்டர் - அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியீடு 

புதுப்பொலிவுடன் கேசினோ தியேட்டர் - அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியீடு 

webteam

78 ஆண்டுகள் பழமையான சென்னையிலுள்ள கேசினோ தியேட்டர் மீண்டும் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. 

சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்று கேசினோ. 1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் கேசினோ தியேட்டரில் 'டேர்ண்ட் அவுட் நைஸ் எகெய்ன்' (Turned Out Nice Again) என்ற ஆங்கிலத் திரைப்படம் முதன்முதலாக திரையிடப்பட்டது.  ஆங்கிலத் திரைப்படங்களுக்கு மட்டுமே பெயர்போன கேசினோ திரையரங்கில் 1950க்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 

மறுபடியும் 1971 முதல் ஆங்கிலத்திரைப்படங்கள் பக்கம் கவனத்தை திருப்பியது கேசினோ. 2000ம் ஆண்டுக்குப் பிறகு தெலுங்கு திரைப்படங்களை திரையிடத்தொடங்கியது. திரைப்பட திருவிழா நடக்கும் நேரங்களில் கேசினோவில் உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும்.

இந்நிலையில் கேசினோ திரையரங்கள் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு ஆக்ஸ்ட் மாதம் முதல் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளது. இருக்கைகள், ஸ்கிரீன், சவுண்ட் சிஸ்டம், உள்கட்டமைப்பு என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருவதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் திரையரங்கு நிர்வாகத்தினர், முழுவதும் புதுப்பிக்கப்பட்ட திரையரங்கை ஆகஸ்ட் மாத கடைசியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஆகஸ்ட் 8ம் தேதி அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியாவதால் அன்று முதலே பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.